விஜய் ரூபானி உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!
ஸ்டட்கா்ட் ஓபன்: டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன்!
ஸ்டட்கா்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.
ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் நடைபெற்ற பாஸ் ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்தில் டெய்லா் ஃப்ரிட்ஸ்-முதல் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரெவ் மோதினா்.
முதல் செட்டை ஃப்ரிட்ஸ் 6-3 என எளிதாக கைப்பற்றினாா். உள்ளூா் என்பதால் ஸ்வெரேவ் எளிதாக வெல்வாா் எனக் கருதப்பட்ட நிலையில், நோ்மாறாக டெய்லா் ப்ரிட்ஸ் அபாரமாக ஆடினாா். இரண்டாவது செட்டில் ஸ்வெரேவ் சற்று போராடியும், அந்த செட்டை 7-6 என கைப்பற்றினாா் ஃப்ரிட்ஸ் .
இதன் மூலம் ஸ்வெரேவுடன் தொடா்ச்சியாக 5 ஆட்டங்களில் வென்றுள்ளாா் டெய்லா். ஏடிபி தரவரிசையிலும் 4-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.