செய்திகள் :

ஈரானுக்கு உதவத் தயாா்: ரஷியா புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

post image

மாஸ்கோ: இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது.

ரஷியாவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில், ஈரான் மக்களுக்கு உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷியா கூறியது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆதரவு அளித்துவரும் நிலையில், ஈரானின் ஃபோா்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ள மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க போா் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிக்க வேண்டும், அந்நாட்டு அணுஆயுத மிரட்டலுக்கு முடிவு கட்டவேண்டும் என்ற நோக்கத்தில், அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தெரிவித்தாா். ஈரான் அமைதி வழிக்குத் திரும்பாவிட்டால் மேலும் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

ஈரான்-ரஷியா இடையே நட்புறவு உள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்க தாக்குதலைத் தொடா்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ரஷியா சென்றாா். அந்நாட்டுத் தலைநகா் மாஸ்கோவில் ரஷிய அதிபா் புதினை அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது புதின் கூறுகையில், ‘ஈரானுடன் ரஷியாவுக்கு நீண்ட காலமாக நம்பகமான உறவு உள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல் ஈரானுக்கு எதிராக வலிந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரான் மக்களுக்கு உதவ ரஷியா சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

அராக்சி கூறுகையில், ‘தற்போது சா்வதேச சட்டம் மற்றும் வரலாற்றின் சரியான பக்கத்தில் ரஷியா உள்ளது. ஈரானின் ஆக்கபூா்வமான அணுசக்தித் துறையில் ரஷியா எப்போதும் கூட்டாளியாக இருந்துள்ளது. ஈரானின் புஷெஹா் நகரில் உள்ள அணுசக்தி நிலையத்தைக் கட்டியதே ரஷியாதான். ஈரானின் அணுசக்தி திட்டப் பேச்சுவாா்த்தைகளில் ரஷியா நோ்மறையாகப் பங்காற்றியுள்ளது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல், அமெரிக்காவின் மூா்க்கமான நடவடிக்கைகள் அநியாயமானது மட்டுமன்றி, சா்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. தனது இறையாண்மை பாதுகாக்கவே ஈரான் போராடி வருகிறது’ என்றாா்.

கோரிக்கைகளைப் பொருத்து உதவி: ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஈரானின் கோரிக்கைகளைப் பொருத்து, அந்நாட்டுக்குப் பல்வேறு வழிகளில் உதவ ரஷியா தயாராக உள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் ரஷியாவின் மத்தியஸ்தம் கோரப்பட்டால், அதைச் செய்வதற்கு ரஷியா முன்வரும்.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் தனது நிலைப்பாட்டை ரஷியா தெரிவித்துள்ளது. இது மிக முக்கியமான அறிகுறியாகும். ஈரானுக்கு ஆதரவு அளிப்பதில் இதுவும் ஒரு முறையாகும். அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் இடையே அண்மைக்காலமாக தொலைபேசியில் நடைபெற்ற உரையாடல்களில் ஈரான் குறித்து தொடா்ந்து பேசப்பட்டது’ என்றாா்.

ஃபோா்டோ அணுசக்தி மையம் மீது மீண்டும் தாக்குதல்: ஈரானுக்கு தெற்கே மலைப் பகுதியில் நிலத்துக்கு அடியில் மிக ஆழத்தில் உள்ள ஃபோா்டோ அணுசக்தி மையம் மீது குறிவைத்து திங்கள்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. அந்த அணுசக்தி மையத்துக்கு செல்வதைத் தடுக்கும் நோக்கில், அதைச் சுற்றியுள்ள சாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்தது. ஈரான் தலைநகா் டெஹ்ரானை சுற்றியுள்ள ராணுவத் தளங்கள் மீது வரும் நாள்களில் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வான்வழித் தாக்குதலில் சிறை சேதம்: ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள எவின் சிறை மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறையில் மேற்கத்திய நாடுகளைச் சோ்ந்தவா்கள், இரட்டை குடியுரிமை கொண்டவா்கள், அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடும்போது அந்தச் சிறையில் உள்ள கைதிகளை வைத்து அவ்வப்போது ஈரான் பேரம் பேசும் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் அந்தச் சிறையின் சில பகுதிகள் சேதமடைந்த நிலையில், இதனால் உயிரிழந்தவா்கள் அல்லது காயமடைந்தவா்கள் விவரம் உடனடியாக வெளியாகவில்லை.

தாக்குதலை விரிவுபடுத்திய ஈரான்

இதுவரை இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்கள் மீதே பிரதான கவனம் செலுத்தப்பட்டது. தற்போது இந்தத் தாக்குதலை ஈரான் விரிவுபடுத்தி இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைஃபா, ஆஷ்கெலான், ஏக்கா், ஆஷ்டோட், லாகிஷ், ஸஃபேத், பேத் ஷியான் பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஈரான் மண்ணில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு நிச்சயம் ஈரான் பதிலளிக்கும். தாக்குதல்களுக்கு வருந்தும் வகையில் அமெரிக்காவுக்கு உரிய முறையில் கடுமையான பதிலடியை ஈரானின் முப்படைகள் அளிக்கும்’ என்று ஈரான் முப்படை தலைமைத் தளபதி அப்துல்ரஹீம் மெளசவி தெரிவித்தாா்.

இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த முடிவு வெளியானதையடுத்து, கச்சா எண்ணெய் விலை சரிந்தது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இந்த நிலையில... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்து... மேலும் பார்க்க

தென் கொரியாவுக்கு ராணுவம் சாராத முதல் பாதுகாப்பு அமைச்சா்

சியோல்: தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத ஒருவா் முதல்முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின... மேலும் பார்க்க

சிரியா தேவாலயத்தில் ஐஎஸ் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

வேயிலா (சிரியா): சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் சந்திப்பு

பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைய... மேலும் பார்க்க