Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.....
அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து
சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பூரி ரத யாத்திரைக்காக 12 ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதையடுத்து மெமு விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுகின்றன.
அதனடிப்படையில், அரக்கோணத்திலிருந்து தினமும் காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு சேலம் வரை செல்லும் மெமு விரைவு ரயில் (ரயில் எண் 16087) திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சேலத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 16088) ரத்து செய்யப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.