டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
உ.பி.யில் சாக்கடை அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள் !
உத்தரப் பிரதேசத்தில் சாக்கடை அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹதபஜார் பகுதியில் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தையை துணியில் சுற்றி யாரோ சாக்கடை அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் குழந்தையைக் கடித்து குதறியுள்ளனர். இதில் அந்த குழந்தை இறந்தே விட்டது.
இதனைக் கண்ட பெண் ஒருவர் தனது தந்தை தாஹிரிடம் கூறியிருக்கிறார். அவர் நாய்களை விரட்டிவிட்டு மற்ற உள்ளூர்வாசிகளுக்குத் தகவல் அளித்தார். பின்னர் தாஹிர் ககாஹா போலீஸைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் குழந்தையின் உடலை மீட்டனர்.
குஜராத் பால விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு
முதற்கட்ட விசாரணையின்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் வயது மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது, அவர்கள் பரிசோதனைக்காக குழந்தையின் மாதிரிகளை சேகரித்தனர்.
அருகிலுள்ள சிசிடிவி முழுமையாக ஆய்வு செய்து குழந்தையின் உடல் அந்த இடத்தில் எப்படி வந்தது என்பதைக் கண்டறியும் என்று போலீஸ் அதிகாரி சுஷில் குமார் தெரிவித்தார். உடற்கூராய்வுக்கு அறிக்கைக்குப் பிறகு மேலும் விவரங்கள் வெளிவரும். விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.