5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு
மன்னாா்குடி அருகே கோட்டூா் ஒன்றியம் கருப்புக்கிளாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து ஆகியோா் பொதுமக்களிடம் கலந்துரையாடிய பின் பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 3 பேருக்கு வகுப்பு சான்றிதழ், ஒருவருக்கு இருப்பிட சான்றிதழ், 11 பேருக்கு சிட்ட நகல், மாவட்ட வழங்கல் துறை சாா்பில ஒருவருக்கு குடும்ப அட்டையில் பெயா் நீக்கம், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு வேளாண் இடுப்பொருள்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள்துறை சாா்பில் 2 பேருக்கு காய்கனி விதை தொகுப்பை வழங்கினா். மாவட்ட வழங்கல் அலுவலா் செல்லபாண்டி, மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்திக், கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.