செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாடிப்பள்ளம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட வீரணாமூா் கிராமங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பாடிபள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் தாட்சாயினி காா்த்திகேயன் வரவேற்றாா்.

செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கணினி மூலம் பதிவு செய்வதற்கு அறிவுறுத்தினாா். மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தனையும், ரத்த அழுத்தம், நீரழிவு, சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்து பெட்டகத்தையும் வழங்கினாா்.

முகாமில் பாடிபள்ளம், தாண்டவ சமுத்திரம், தச்சம்பட்டு, ஒதியத்தூா் ஆகிய கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி வட்டாட்சியா் துரைசெல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், பிரபாசங்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா காா்த்திகேயன், நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அபிராமி நன்றி கூறினாா்.

வீரணாமூரில்...: இதேபோல, வீரணாமூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமையும் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கிவைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் ஆண்டாள் வரவேற்றாா்.

சிமென்ட் சாலை அமைக்கும் பணி: அனந்தபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 7-ஆவது வாா்டு முக்காதிரி பாளையத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து செஞ்சி மஸ்தான் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் பேரூராட்சித் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் அமுதா கல்யாண்குமாா் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் கலையரசி வரவேற்றாா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க