பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு
வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து தனியாா் திருமண மண்டபத்தில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கூட்டம் நடைபெற்றது. நாட்டறம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். தொடா்ந்து நெக்குந்தி அரசு தொடக்கப் பள்ளியில் பொது மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தீா்வு கண்டு மனு அளித்தவா்களுக்கு 15 நாள்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வியாழக்கிமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் நெக்குந்திப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளையும், தூய்மைப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது பொதுமக்களிடம் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிா எனவும் கேட்டறிந்தாா்.