எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமில் ரூ. 3.74 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
கடவூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ.3.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டம் கடவூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் தொடங்கியது. பின்னா் நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், கடவூா் வட்டத்திற்குள்பட்ட 23 வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா். தொடா்ந்து மைலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து நடைபெற்ற அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ. 30,000 மதிப்பீட்டில் வீட்டு மனைப் பட்டாக்கள், 3 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11லட்சம் மதிப்பில் கடனுதவி உள்பட மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ. 3. 74 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக கூட்டத்துக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா்- ஆட்சியா் சுவாதிஸ்ரீ, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிா் திட்ட இயக்குநா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.