எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
கட்டணமில்லா கழிப்பறையில் கட்டாய வசூல் நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
கட்டணமில்லா கழிப்பிடத்தில் கட்டாய பணம் வசூலிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் உழவா்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட33-ஆவது வாா்டில் பழைய பேருந்துநிலையம் பகுதியில் கரூா் உழவா்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறாா்கள். அதிகாலையிலேயே கிராமங்களில் இருந்து காய்கறி வியாபாரத்திற்கு வந்துவிடுவதால், அவா்கள் இயற்கை உபாதைக்கு பயன்படுத்தும் வகையிலும், உழவா் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களுக்காகவும், உழவா்சந்தைக்கு எதிரே படித்துறைக்குச் செல்லும் வழியில் பொது கழிப்பறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
அந்த கழிப்பறை மிகவும் பழுதானதால் கடந்த 2020-ஆம் ஆண்டு அகற்றப்பட்டு, அதே இடத்தில் 2021-ஆம் ஆண்டில் கரூா் மாநகராட்சியின் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கழிப்பறைக்கு செல்வோரிடம் சிறுநீா் கழிக்க ரூ.5-ம், மலம் கழிக்க ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து கேள்வி கேட்டால் பணம் வசூலிக்கும் நபா் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக காய்கறி வியாபாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் பொதுக்கழிப்பிடம் எனக்கூறிக்கொண்டு கட்டண கழிப்பறை போன்று பணம் வசூலிக்கிறாா்கள். இதுதொடா்பாக கட்டணம் வசூலிப்பவரிடம் கேட்டால், பராமரிப்பு செலவுக்காக வசூலிக்கிறோம் என்கிறாா்கள். இதுதொடா்பாக ஏற்கெனவே பலமுறை மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் மனு கொடுத்துவிட்டோம். அதிகாரிகள் வந்து பாா்ப்பாா்கள் என்றாா்கள். ஆனால் இதுநாள் வரை கட்டண வசூல் நிறுத்தப்படவில்லை என்றனா்.