செய்திகள் :

உச்சநீதிமன்ற விதிகளின்படி டிஜிபியை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

post image

சென்னை: டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான தாமோதரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வரும் 31-ஆம் தேதியுடன், தமிழக காவல் துறை டிஜிபி-யாக உள்ள சங்கா் ஜிவால் ஓய்வு பெறுகிறாா். புதிய டிஜிபி நியமனத்தின்போது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக 30 ஆண்டுகளாகப் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். தோ்வாணையக் குழு இந்தப் பட்டியலை ஆய்வு செய்து தகுதியான 3 பேரை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். அதில், ஒருவரைத் தோ்வு செய்து தமிழக அரசு டிஜிபி-யாக நியமிக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகளை அமல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காவல் துறை டிஜிபி நியமனம் என்பது முக்கியமானது.

எனவே, தமிழக டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற விதிகளைக் கட்டாயம் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 31-ஆம் தேதியுடன் டிஜிபி ஓய்வு பெற உள்ளாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட முடியாது. டிஜிபி நியமனம் உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிா்த்து மனுதாரா் வழக்குத் தொடரலாம். ஆனால், இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.மானியக் கோரிக்கையின்போது, தமிழக அரசு அறிவித்த டாஸ்மாக்... மேலும் பார்க்க

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பெண் வழக்கறிஞா்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேவாலை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

தமிழகத்தில் தினசரி நடக்கும் வழிபறி, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று அதிமுக மாநிலங்க... மேலும் பார்க்க

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

ரஷியாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சோ்ந்தவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா் விருதுநகா் மாவட்ட மதிமுக மக்... மேலும் பார்க்க

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.தமிழக காவல் துறையின் கீழ் 1,366 ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும், 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நில... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான உறுப்பினா் சோ்க்கை இயக்கத்திற்கு ஓடிபி சரிபாா்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச... மேலும் பார்க்க