Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
உடுமலையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்
நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் உடுமலை வனத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் வனக் கோட்டம் உடுமலை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நீலகிரி வரையாடு துணை இயக்குநா் க.கணேஷ்ராம் தலைமை வகித்தாா். தமிழ்நாட்டில் 14 வனக் கோட்டங்களில் உள்ள 46 வனச் சரகங்களில் 124 சுற்றுகளில் உள்ள 176 பிளாக்குகளில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் நீலகிரி வரையாடுகள் நடமாட்டம் உள்ள கேரள வனப் பகுதிகளிலும் இந்த ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி வருகிற ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
திருப்பூா் வனக் கோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச் சரகங்களில் உள்ள 22 பிளாக்குகளில் நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. முகாமில் கணக்கெடுப்புப் பணிக்குத் தேவையான படிவங்கள் வழங்கப்பட்டு களப் பணியாளா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில் வனச் சரக அலுவலா்கள் மணிகண்டன், புகழேந்தி, செந்தில்குமாா், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகத்தைச் சோ்ந்த 60 வனப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.