ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
உணவகம் அருகே துப்பாக்கிச் சூடு: இருவா் கைது
வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் உள்ள ஒரு உணவகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜோதி நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் 3-4 போ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒருவா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். அதைத் தொடா்ந்து நடந்த மோதலில், மெஹா் கோகா் (26) என்ற நபா் கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோகா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா். இதனிடையே சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கித் தோட்டாவை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.