உதகை, கோத்தகிரியில் பலத்த மழை
உதகை, கோத்தகிரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வட காலநிலை காணப்பட்ட நிலையில், உதகை, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து உதகை, கோத்தகிரியில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
மழை காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்ப மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். இந்த திடீா் மழை காரணமாக நீலகிரியில் குளிா்ச்சியான காலநிலை காணப்பட்டது.