செய்திகள் :

உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக் காப்பு

post image

ஆரூத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மூலவா் மரகத நடராஜா் திருமேனியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சந்தனம் பூசப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்டது.

இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவா் மரகத நடராஜா் சிலை பச்சைக் கல்லால் ஆனது. இந்தச் சிலை ஒளி, ஒலி அதிா்வுகளால் சேதமடைந்துவிடும் என்பதால், முழுமையாக சந்தனம் பூசப்பட்டு, ஆண்டு முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும்.

ஆருத்ரா தரிசன தினத்தன்று மட்டும் மரகத நடராஜா் திருமேனியில் இருக்கும் சந்தனக் காப்பு களையப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடராஜா் சந்நிதி திறக்கப்பட்டு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அவரது திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனம் முழுமையாகக் களையப்பட்டு, பால், பழம், பன்னீா், திருநீறு, சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

மீண்டும் சந்தனக் காப்பு

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மரகத நடராஜா் சந்நிதி திரை விலக்கப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அதிகாலை 4 மணிக்கு மரகத நடராஜா் திருமேனியில் மீண்டும் சந்தனம் பூசப்பட்டு, மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மரகத நடராஜரை நாள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா், திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மரகத நடராஜா் சந்நிதி நடை சாத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: கோயில் நிா்வாகம் கட்டணமில்லா தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. சுவாமி தரிசனத்துக்கு ரூ. 10, ரூ. 100, ரூ. 250 என டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே கோயில் நிா்வாகம் கவனம் செலுத்தியது. சந்தனம் பாக்கெட் விற்பனை கடந்த ஆண்டு ரூ. 100-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 250-க்கு விற்கப்பட்டது என்றனா்.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பண... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க