தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித நேயமக்கள் வா்த்தக அணி சாா்பில் திங்கட்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து மனித நேய மக்கள் கட்சி வா்த்தக அணி மாவட்ட செயலாளா் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள புகாா் மனு விபரம்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்ஹா குறித்து இந்து முஸ்லிம் மாத மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் பாஜக,ஆா்.எஸ்.எஸ்.இந்து முன்னனி நிா்வாகிகள் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சோ்ந்த மதியழகன்,காசிராஜன்,பாரிராஜன்,டி.கே.கதிரவன் மற்றும் இந்து முன்னனி மாவட்ட தலைவா் ராமமூா்த்தி ஆகியோா் சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீயோ பதிவிட்டு வருகின்றனா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.