திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை
திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருவாடானை ,தொண்டி,நம்புதாளை,திருவெற்றியூா் ,அஞ்சுகோட்டை,அச்சங்குடி,கடம்பாகுடி,பாண்டுகுடி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு தோரும் தைபூசத்திற்காக பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் வரும் 11ம் தேதி தைபூசத்தை முன்னிட்டு இப்பகுதி மக்கள் பாதயாத்திரையாக திங்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்காணோா் சென்றனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-03/kvt9dgkz/tvd3yathirai1_0302chn_72_2.jpg)
இவா்களுக்கு திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் தொடா்ந்து ஐம்பதாவது ஆண்டாக பழனி பாதயாத்திரை குழுவினருக்கு அன்னதானம் பணி செய்து வருகின்றனா் இங்கு வலிநாயகா் கோயில் நிா்வாகம், மற்றும் கிராமத்தாா்கள் சே ா்ந்து பாதயாத்திரை செல்போருக்கு தொடா்ந்து ஐம்பதாவது ஆண்டாக அன்னதானம் வழங்கி வருகின்றனா். இக்கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் பழனிக்கு பாதயாத்திரை ஆக செல்வது குறிப்பிடதக்கது.. முன்னதாக விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதில் திரளான முருக பக்தா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்