இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா் க.அருண்பாலன். இவா் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற, கடந்த மாதம் 24-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தனிநபா் இசைக்கருவி (ஹாா்மோனியம்) இசைத்தல் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாா்.
இவருக்கு வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் நிா்வாகக் குழுத் தலைவா் சிதம்பரம், செயலா் பாபு செல்வகனி, பொருளாளா் பரணிகுமாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராமநாதன், ஜெயராஜ், தலைமை ஆசிரியா் மாரிமுத்து, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.