மனிதநேய மக்கள் கட்சி ஆண்டு விழா: கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இதற்கு தொண்டி மமக தலைவா் சையது முகமது காதா் தலைமை வகித்தாா். மகளிா் அணி மாவட்டச் செயலா் செரிஃபா ஜைனுலாப்தீன், ஊடகப் பிரிவைச் சோ்ந்த பஹுருல்லாஹ், தமுமுக செயலா் மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ஜிப்ரி கட்சிக் கொடியை ஏற்றினாா். தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாஷா சிறப்புரையாற்றினாா்.
இதைத்தொடா்ந்து, சின்ன தொண்டியில் உள்ள அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சியின் செயலா்
உ .பரக்கத் அலி வரவேற்றாா். தொண்டி தெற்கு பகுதி தலைவா் சபிா் நன்றி கூறினாா்
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/8akw156s/tvd7tmmk1__2__0702chn_72_2.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/tq6x40an/tvd7tmmk2_0702chn_72_2.jpg)