சிறந்த ஆசிரியா்கள் 200 பேருக்கு விருது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 200 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் தனியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசி ரங்கநாயகி வரதராஜன் பொறியியல் கல்லூரி, ஸ்டூடன்ட் டாட் காம் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 ஆசிரியா்களைத் தோ்ந்தெடுத்து மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியா்களுக்கான விருதை கல்லூரியின் தாளாளா் பிருந்தாராகவன், பட்டிமன்ற பேச்சாளா் கவிதாஜவகா் ஆகியோா் வழங்கினா்.
இந்த விழாவில் கமுதி வட்டத்தில் உள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா்கள் சி.கிருஷ்ணமூா்த்தி, ரவிச்சந்திரன், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் இந்திராணி, பிரபு உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டது.