உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், யாதவா் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சாா்பில், தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகக் கல்வி அலுவலரும், காப்பாட்சியருமான (பொறுப்பு) இரா. நடராசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘முத்தமிழறிஞா் கலைஞரின் படைப்புக்களில் காந்தியச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசினாா்.
தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மேலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் பங்கேற்றனா்.
உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.