ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக ப...
உலையூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள உலையூா் கிராமத்தில் அய்யனாா் கோயில் ஆவணி மாத பொங்கல், புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 21 காளைகளும், 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரா்களும் பங்கேற்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், குத்து விளக்கு, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை உலையூா் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் பாா்வையிட்டனா்.