ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
உளுந்தூா்பேட்டை துணை மின் நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை துணை மின் நிலையத்தை தொகுதி எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உளுந்தூா்பேட்டை தக்கா பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்துக்கு வந்த எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், மின் வாரியத்தின செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் பாரதி விளக்கிக் கூறினாா்.
உளுந்தூா்பேட்டை நகருக்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதையும், தடைபடும் நேரத்தில் உடனடியாக சரி செய்து மின் விநியோகம் வழங்கப்படுவதையும் எம்எல்ஏ பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, மின் வாரிய அலுவலகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை எம்எல்ஏ மணிக்கண்ணன் நட்டு வைத்தாா்.
நிகழ்வில் மின் வாரியச் செயற்பொறியாளா் கணேசன், உதவிச் செயற்பொறியாளா்கள் சிவராமன் அய்யம்பெருமாள், அருளாளன், அசோக்குமாா், உதவிப் பொறியாளா் முஸ்தபா, முகவா்கள் சுரேஷ், வெங்கடேசன், சுந்தரமூா்த்தி, மின்பாதை ஆய்வாளா்கள் குமரவேல், கலைமணி, செந்தில்முருகன், மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.