Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; ...
உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக நாதன் மெக்ஸ்வீனி!
வருங்காலத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக மெக்ஸ்வீனி களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட்டில் டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமானார்.
முதல் 3 போட்டிகளில் 72 ரன்களை மட்டுமே குவித்ததால் 4ஆவது போட்டியில் அவருக்குப் பதிலாக சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.
38 வயதாகும் உஸ்மான் கவாஜா ஆஷஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனி தி சிட்னி மார்னி ஹெரால்ட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்
தொடக்க வீரராக களமிறங்குவது பிடித்தமானது. உஸ்மான் கவாஜா சிறப்பான வீரர். ஆனால், வாய்ப்பு வரும்போது அதை சிறப்பாக செய்வேன். அதைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு எல்லாமே சீக்கரமே நடந்துவிட்டது. தற்போது டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.
நான் தயாரிப்புகளை சரியாக செய்து எனக்கான வாய்ப்புக்காகவும் வாய்ப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தேர்வுக்குழு தலைவர்களிடம் பேசுவேன். நான் எந்த இடத்தில் வேண்டுமனாலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். மீண்டும் ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன் என நம்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக நான் செய்தது என்னவென்றால் நீண்ட நேரம் பேட்டிங் செய்து அதில் ரன்கள் குவிப்பதுதான். டெஸ்ட் போட்டி மிகவும் தனித்துவமானது. அந்த நேரத்தில் அது மிகவும் தனிப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது.
கான்ஸ்டாஸ் அசத்தல், சுழல் பந்துக்கு எதிராக அசத்துவேன்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வழி இருக்கிறது. கான்ஸ்டாஸ் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினார். கடந்த சில வருடங்களாக நான் ஆஸ்திரேலியாவில் சுழல்பந்துகளை சிறப்பாக விளையாடியுள்ளேன். ஆனால், அங்கு வித்தியாசமானது...
ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் எனது ஆட்டத்தில் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.
அடுத்து ஆஸி.க்கு இலங்கை உடனான 2 போட்டிகள் கொண்ட தொடர் இருப்பது குறிப்பிடத்தக்கது.