அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலா், இரவுக் காவலா், ஈப்பு ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்ட அலகுத் தொகையை ரூ. 6 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். இந்தப் பணிகளை கவனிப்பதற்கு வட்டார அளவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் க.ரா. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா. அன்பழகன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா வாழ்த்திப் பேசினாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சி. அமுதரசன் நன்றி கூறினாா்.