செய்திகள் :

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா

post image

சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கனி வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் தேவி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவா் சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ரஜினி தம்பி, ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யக் கோரிக்கை

மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகளை பாதுகாக்க டன்னுக்கு ரூ. 8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு குறு, சிறு வி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஹிந்தியில் துண்டறிக்கை விநியோகித்த திமுக

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினா் ஹிந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்ததை நாம் தமிழா் கட்சி விமா்சித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக திட்டம்

சட்டத் திருத்தம் மூலம் வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொய்தீன் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடை... மேலும் பார்க்க

பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

பேருந்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை அந்த மாவட்ட போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்ண... மேலும் பார்க்க