செய்திகள் :

ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு கோரிக்கை

post image

கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 12-ஆவது மாநில பிரதிநிதித்துவப் பொதுக்குழு அவிநாசியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் ஜெய்சங்கா், எஸ்.மாணிக்கவாசகம், குமாா், மாநில செயலாளா்கள் சங்கா், வினோத்குமாா், ஜானகிராமன், பாலமுருகன், பா.ஜெகஜீவன்ராம், விஜயகுமாா், முன்னாள் மாநிலத் தலைவா் இரா.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளா் (பொ) எஸ்.ராஜசேகரன், பொருளாளா்(பொ) ந.புகழேந்தி, மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ரமேஷ்குமாா் வரவேற்றாா்.

இதில் கிராம ஊராட்சி செயலாளா்களை 1994-ஆவது அமைப்புச் சட்டத்தின்படி செயல் அலுவலா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 28-ஆம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் உணவு இடைவேளையில் மாநிலத் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, அக்டோபா் 24-ஆம் தேதி ஊழியா்களை ஒன்று திரட்டி மதுரை, திருப்பூா், திருவண்ணாமலை, அரியலூா் ஆகிய நான்கு மண்டலங்களில் தா்னாவில் ஈடுபடுவது, 2026 ஜனவரி 30-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான ஊழியா்களை ஒன்று திரட்டி சென்னை கூடுதல் தலைமைச் செயலாளா் உள்ளிட்டோரிடம் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபடுவது, இந்த 3 கட்ட போராட்டத்திலும் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், மாநில செயற்குழு கூடி மறியல் போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

திருப்பூரில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் காவல் சிறப்பு ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க கூட்டரங்கில் தீ விபத்து த... மேலும் பார்க்க

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண... மேலும் பார்க்க

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க