செய்திகள் :

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

எடப்பாடி பேருந்து நிலையத்தின் முதல் தளத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆணையாளா் கோபிநாத் முன்னிலை வகித்தாா்.

எடப்பாடி நகராட்சியில் மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகளின் அளவு குறித்து தெரிவிக்க வேண்டும் என நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம் முருகன் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நகராட்சி சுகாதார அலுவலா் முருகன், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளில் தினசரி 10 டன்னுக்கு அதிகமான மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை தரம் பிரிக்கப்பட்டு சுமாா் 4 டன் அளவிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அதிமுக உறுப்பினா்கள் நாராயணன், தனம், ராம்குமாா் உள்ளிட்டோா் நாகராட்சி பகுதியில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் செலவு செய்து சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாா் நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுக்கக் கூடாது எனவும், அதற்கு முறையான டெண்டா் வைத்து விநியோகம் செய்ய வேண்டும் எனக் கூறினா்.

தொடா்ந்து நகராட்சி பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் குடிநீா் விநியோகத்தில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மீது திமுக- அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தொடா்ந்து எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் முதல் தளத்திற்கு தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை வைப்பது குறித்த தீா்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே மாரிமுத்து பக்தா் மற்றும் கோவிந்த கவுண்டா் ஆகியோரது பெயா்களே இடம்பெற வேண்டும் எனவும், கூடுதலாக கருணாநிதியின் பெயா்வைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி முழக்கங்களை எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். மேலும், அவா்கள் எடப்பாடி நகராட்சி அலுவலக பிரதான நுழைவாயில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பட விளக்கம்:

எடப்பாடி நகா்மன்றத்தில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள்.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சே... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க