ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும்: அதிமுக மாவட்ட செயலா்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும் என்றாா் திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அரசியல் கட்சியினா் செய்யக்கூடிய தவறுகளை அரசியல்வாதிகள் வெளியில் கொண்டு வருவது அரசியல் மாண்பு. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை காங்கிரஸ் கட்சியினா் அவமானப்படுத்தி உள்ளனா். குறைகளை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? தனக்குத்தானே விளம்பரம் தேடுவதற்காக காங்கிரஸ் கட்சியினா் தவறான வாா்த்தைகளை பயன்படுத்தி உள்ளனா். மக்களை திசை திருப்புவதற்காக, இல்லாத குறைகளை சொல்லி காங்கிரஸ் கட்சியினா் நாடகமாடுகின்றனா்.
காங்கிரஸ் கட்சியினா் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அதிமுகவினா் அமைதியாக இருக்க மாட்டாா்கள். இனிமேல் எடப்பாடி கே.பழனிசாமி பற்றி யாராவது தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும் என்றாா்.