செய்திகள் :

எம். ஜி. ஆர். தேடிக்கொண்டிருந்த ஜோதிடர் யார்?

post image

மறைந்த நடிகர் எம்ஜிஆர் நீண்ட காலமாக ஒரு ஜோதிடரைத் தேடிக்கொண்டிருந்த தகவல் சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளது.

மறைந்த நடிகரும் முதல்வருமான எம். ஜி. ஆருக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால், அன்றாட வாழ்க்கையில் அதை நேர்த்தியாகக் கடைபிடிப்பவர் அல்ல. அதேநேரம், மூட நம்பிக்கைகளில் அவருக்குத் துளியும் ஈடுபாடுகள் இருந்ததில்லை.

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது பொதுநிகழ்வுகளில் திருநீறு வைத்து வந்தவர், திமுகவில் இணைந்தபின் அதையும் தவிர்த்தார்.

இப்படியான எம்ஜிஆர், தன் மறைவுவரை ஒரு ஜோதிடரைத் தேடிக்கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?

மறைந்த நடிகர் எம். ஆர். ராதாவின் பேரனும் நடிகருமான எம். ஆர். ஆர். வாசு விக்ரம் ஒரு நேர்காணலில், “எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. பிறந்த நேரம் துல்லியமாகத் தெரிந்தால் சில விஷயங்களை ஊகித்துவிடலாம். அதற்கு உதாரணம், எம்ஜிஆர். அவர் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது ஜோதிடர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். ஜோதிடம் பார்த்தவர் எம்ஜிஆரிடம், “உங்களைப் பல்லக்கில் வைத்து கொண்டாடுவார்கள்” எனக் கூற, இதைக்கேட்டு ஆத்திரமான எம்ஜிஆர், ஜோசியகாரன் பொய் சொல்கிறான் என விரட்டி அடித்திருக்கிறார்.

எம்ஜிஆர்

ஆனால், சில ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் நடித்த படமொன்று மதுரையில் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. எம்ஜிஆர் அங்கு சென்றபோது அவரின் ரசிகர்கள் பெரிய பல்லக்கில் அவரை ஏற்றி அழகுபார்த்தனர். இந்த நிகழ்வு எம்ஜிஆருக்கு அதிர்ச்சியைத் தர, அன்றிலிருந்து அந்த ஜோதிடரைத் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால், இறுதிவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் முத்திரை பதித்த எம்ஜிஆர், ஒரு ஜோதிடரை இறுதிவரை தேடிக்கொண்டிருந்தது சுவாரஸ்யம்தான்!

இதையும் படிக்க: ஒரு குழு சினிமாவைத் திட்டமிட்டு அழிக்கிறது: கார்த்திக் சுப்புராஜ்

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்துக்கு இடையே ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்ஸியை பெற்ற டிரம்ப்!

கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருக்கும் அன்டோனியோ கோஸ்டா ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை... மேலும் பார்க்க

ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார். வேலன் படத்தின் மூலம் தம... மேலும் பார்க்க

வெற்றிக்கான ரசிகசியம் என்ன? சிறகடிக்க ஆசை நாயகியின் பதிவு

வெற்றிக்கான ரசிகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இதுதான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உருவெடுத்ததிலிருந்து கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

புதிய படங்களில் ஒப்பந்தமாகிவரும் காவ்யா அறிவுமணி!

சின்ன திரையில் நடித்து பிரபலமடைந்த காவ்யா அறிவுமணி ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குற... மேலும் பார்க்க