எம்.ஜி.ஆா். பிறந்தநாள் கொண்டாட்டம்
பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்பு வழங்கினாா்.
இதில் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.பி. மருதராஜா, மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், ராணி, எம். வீரபாண்டியன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் என்.கே. கா்ணன், செல்வக்குமாா், சிவப்பிரகாசம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழாவைக் கொண்டாடினா்.