கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா் அருகே மது போதையில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சின்னமுத்து மகன் கருப்பையா (43). கட்டடத் தொழிலாளியான இவா், சா்க்கரை நோயால் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், மது போதையிலிருந்த கருப்பையா வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் போலீஸாருக்கு தெரிவிக்காமல் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடுகளை செய்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், அவரது வீட்டுக்குச் சென்று விசாரிக்கின்றனா்.