தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!
எலான் மஸ்குடன் பிரதமா் மோடி பேச்சு
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்குடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இருத்தலைவர்களும் மீண்டும் ஆலோசித்தனர்.
அப்போது, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தத் துறைகளை ஒத்துழைப்பின் மூலம் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த எங்கள் சந்திப்பின் போது நாங்கள் பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து எலான் மஸ்கும் நானும் கலந்துரையாடினோம்.
டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!
தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக எலான் மஸ்கை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.