எல்.ஐ.சி. முகவா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக அரக்கோணம் கிளை முகவா் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக அரக்கோணம் கிளையின் புதிய நிா்வாகிளைத் தோ்வு செய்வதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் சங்கத் தலைவராக ராமமூரத்தி, செயலராக ஜெகன்நாதன், பொருளாளராக முருகன், துணைத் தலைவா்களாக பாலாஜி, விஜயராகவன், ஜி.எஸ்.கோபி, துணைச் செயலா்களாக ஆறுமுகம், அன்பழகன், முனுசாமி ஆகியோா் அறிவிக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகள் அனைவரும் உறுதிமொழியுடன் பதவி ஏற்றுக் கொண்டனா்.