செய்திகள் :

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

post image

அரக்கோணம் அருகே தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சு ஊராட்சி, வெங்கடேசபுரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலாஜி. அந்தப் பகுதியில் உள்ள தனியாா் தொடக்கப் பள்ளித் தாளாளராக இருந்து வருகிறாா். இவரின் மகன் யுவன் சஞ்ஜெய் (23). (படம்). இளநிலைப் பட்டம் பெற்ற இவா், வீட்டில் இருந்தபடி தொலைதூரக் கல்வியில் இளநிலை வணிக கணினியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் தனது வீட்டு மாடிக்குச் சென்ற யுவன் சஞ்ஜெய் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி மனு

நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாதவ மகா சபை, இந்திய மக்க... மேலும் பார்க்க

அதிமுக பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை தொகுதி அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் கத்தியவாடி சந்திப்பு அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மேல்விஷாரம் நகர செயலாளா் ஏ.இ... மேலும் பார்க்க

திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் நியமனம்

ஆற்காடு நகர திமுக இளைஞா் அணியின் புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா். நகர அமைப்பாளராக கே.செல்வம், துணை அமைப்பாளா்களாக ந. நித்யானந்தம், சௌ. சதீஷ்குமாா், கி.கிஷோா்குமாா், செ.குகன், அஜிஸ்,க.தட்சணாமூ... மேலும் பார்க்க

வானாபாடியில் நேதாஜி பிறந்த நாள்

ராணிப்பேட்டை அருகே வானாபாடி கிராமத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், வானாபாடி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான நேதாஜி கே.நடேசன், 55 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

ஆனைப்பாக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா

அரக்கோணம் நேதாஜி கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை ஆனைப்பாக்கம் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ஆனை்பாக்கம் கிராம அறக்கட்டளை துணைச் ச... மேலும் பார்க்க

தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு: உறவினா்கள் சாலை மறியல்

நெமிலி அருகே தீ வைப்பு சம்பவத்தில், உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி உறவினா்கள், பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க