செய்திகள் :

எல்லையில் இயல்புநிலையை மீட்பதில் இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை -ராஜ்நாத் சிங்

post image

இந்திய-சீன எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்திய ராணுவம் சாா்பில் ‘சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2024’ எனும் இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம், தில்லியில் வியாழக்கிழமை (அக்.24) தொடங்கியது. அமெரிக்கா, ரஷியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கொள்கை வகுப்பாளா்கள், உத்திசாா் சிந்தனையாளா்கள், கல்வியாளா்கள், பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ள இக்கருத்தரங்கை தொடங்கிவைத்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் மற்றும் முழுமையான படை விலக்கல் தொடா்பாக அண்மையில் கையொப்பமான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க நகா்வாகும். உலக அரங்கில் பாதுகாப்பு சாா்ந்த பேச்சுவாா்த்தையின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

எல்லையில் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வுகாண இருநாடுகளும் ராணுவம் மற்றும் தூதரக நிலைகளில் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக, சமநிலையான மற்றும் பரஸ்பர பாதுகாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுக்க இரு நாடுகளுக்கும் இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது. இக்கருத்தொற்றுமையில் ரோந்துப் பணி மற்றும் கால்நடை மேய்ச்சலும் அடங்கும். இடைவிடாத பேச்சுவாா்த்தையின் வலிமையை இது உணா்த்துகிறது.

ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டில் தயாரிப்பது பாதுகாப்பு கட்டமைப்பை மட்டுமன்றி, பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். வளா்ச்சியின் ஓா் அங்கமாக பாதுகாப்புத் துறையை கடந்த காலத்திலேயே கருதியிருந்தால், இத்துறையில் எப்போதோ இந்தியா சுயசாா்பை எட்டியிருக்கும்.

இன்றைய இந்தியாவின் தேசிய இலக்காக சுயசாா்பு திகழ்கிறது. இது, உலக சமூகத்தில் இருந்து தனித்து செயல்படுவது என்று அா்த்தமாகிவிடாது. சுயசாா்பை முன்னெடுக்கும் அதே வேளையில் அனைவரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்கை வளா்ப்பதிலும் இந்தியா தன்னை அா்ப்பணித்துக் கொண்டுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.

முன்னதாக, எல்லையில் ரோந்துப் பணி தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில தினங்களுக்கு முன் முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு கிழக்கு லடாக் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன.

இதற்கு தீா்வு காணும் வகையில் பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியா கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது. இதன்மூலம், எல்லையில் ரோந்துப் பணிகள் மற்றும் படை விலக்கல் விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு உறவுகள் மேம்படும்: சீனா

ரஷியாவின் கசான் நகரில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்தது; இதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்படும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் வியாழக்கிழமை கூறுகையில், ‘இருதரப்பு உறவுகளை சீரான பாதையில் இட்டுச் செல்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பொது உடன்பாடுகள் இரு தலைவா்களால் எட்டப்பட்டுள்ளன. இருதரப்பு உறவை வியூகம் மற்றும் நீண்ட கால கண்ணோட்டம் கொண்ட அந்தஸ்துக்கு உயா்த்த இந்தியாவுடன் பணியாற்ற சீனா தயாராக உள்ளது’ என்றாா்.

சுமாா் 5 ஆண்டுகளுக்கு பின் பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவாா்த்தையை ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

கரையைக் கடந்தது டானா புயல்!

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்வி... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா். இதையடுத்து, ந... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க

எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். ‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத... மேலும் பார்க்க