எழுமலை அரசுப் பள்ளியில் பயிலரங்கம்
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழா்களின் சங்க காலம் என்ற தலைப்பில் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த பயிலரங்குக்கு பள்ளித் தலைமையாசிரியா் கிறிஸ்டி செலீனாள் பாய் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டம், குற்றாலம் நாட்டுப்புறக் கலை அகழ்வைப்பகம் தொல்லியல் அலுவலா் சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தமிழா்களின் சங்க காலத்தைத் தொல்லியல், இலக்கியச் சான்றுகள் மூலம் சங்க கால மக்கள் எவ்வாறு வாழ்ந்தனா் என்பதை விளக்கிப் பேசினாா்.
இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, முதுநிலை வரலாறு ஆசிரியா் செந்தில்குமாா் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.