திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......
எஸ்டிபிஐ நிா்வாகிகள் தோ்வு
திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. தோ்தல் அலுவலா்களாக ஹமீது பிரோஜ், அஸ்கா் அலி ஆகியோா் செயல்பட்டனா்.
மாநில பொதுச் செயலாளா் அபூபக்கா் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினா் பாயிஷா சித்திக்கா, தஞ்சை மண்டல தலைவா் தப்ரேஆலம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
தெடா்ந்து, புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டன். அதன்படி, மாவட்டத் தலைவராக மாஸ்அஜிஸ், மாவட்ட துணைத் தலைவா்களாக அப்துல் லத்தீப், விலாயத்உசேன், பொதுச் செயலாளராக மா்ஜுக், செயலாளா்களாக ஜெமீன், ஜாஸ்மின், அசாருதீன், பொருளாளராக பகுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்களாக ஜூபைதம்மாள், அபுதாஹிா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.