செய்திகள் :

'ஏ' அணிகள் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா

post image

ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்டில், இந்தியா 'ஏ' அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிய, இந்த வெற்றியுடன் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

லக்னெளவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 420 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் மானவ் சுதர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து தனது இன்னிங்ûஸ விளையாடிய இந்தியா, 194 ரன்களுக்கே சுருண்டது. சாய் சுதர்சன் 75 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலிய பெளலர்களில் ஹென்றி தார்ன்டன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

226 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ விளையாடிய ஆஸ்திரேலியா, 185 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 85 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் மானவ் சுதர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியாக, 412 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து வென்றது. கே.எல்.ராகுல் 176, சாய் சுதர்சன் 100 ரன்களுடன் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆஸ்திரேலிய வீரர்களில் டாட் மர்ஃபி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஷாருக்கனை இயக்கியுள்ளார். ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக இது உர... மேலும் பார்க்க

தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!

வேட்டுவம் திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.நடிகர் அட்டகத்தி தினேஷ் தன் பெயரை வி. ஆர். தினேஷ் என மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான தண்டகாரண்யம் திரைப்படம் நல்ல வரவே... மேலும் பார்க்க

வேடுவன் டிரைலர்!

நடிகர் கண்ணா ரவி நடித்த வேடுவன் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. கைதி, லவ்வர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கண்ணா ரவி. முழு கமர்சியல் கதைகளைத் தாண்டி ரத்தசாட்சி போன்ற சமூக ரீதியான கதையையும் தேர... மேலும் பார்க்க

சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு கலைமாமணி விருது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்குத் தேர்வான பலரும் தங்கள் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்!

காஞ்சிபுரம் கணேஷ் நகரில் அமைந்துள்ள தும்பவனம் மாரியம்மனுக்கு நவராத்திரி விழாவையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது... மேலும் பார்க்க

இவை ஏஐ புகைப்படங்கள் அல்ல: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்கள் அடங்கிய விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் இவையெல்லாம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல, நிஜமான புகைப்படங்கள் என்று விளக்கம் அளித்... மேலும் பார்க்க