அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!
ஏக்நாத் ஷிண்டே வருகையின் போது டிரோன் பறக்கவிட்ட 2 பேர் கைது
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வருகையின்போது ரோன் பறக்கவிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், ஹிவாலியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்திருந்தார். அவர் வருகையின் போது வானில் டிரோன் ஒன்று பறந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை? மெக்சிகோ அதிபர் எச்சரிக்கை!
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்ட ஒரு நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். தொடர்ந்து இந்த விவகாரத்தில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.
இந்த சம்பவம் சந்தேகத்திற்குரியதாகத் தெரியவில்லை.
இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என்றார். முன்னதாக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது பாதுகாப்பு கருதி வானில் டிரோன் பறக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.