ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டின் சிறந்த டி20 அணி; இடம்பிடித்த 3 இந்திய வீராங்கனைகள்!
கடந்த ஆண்டின் சிறந்த டி20 மகளிரணியை ஐசிசி இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க:“12 விக்கெட்டுகள்...” ரஞ்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரம்!
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியில் மூன்று இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா இருவரும் கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய வீராங்கனைகளை தவிர்த்து, இந்த அணியில் இரண்டு தென்னாப்பிரிக்க வீராங்கனைகள், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளிலிருந்து தலா ஒரு வீராங்கனை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவுக்கு காயம்; 2-வது டி20 போட்டியில் விளையாடுவாரா?
ஐசிசியின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணி விவரம்
லாரா வேல்வர்ட் (கேப்டன்), மாரிஸேன் காப், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, சமாரி அத்தப்பட்டு, ஹேலி மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், மெலி கெர், ஓர்லா பிரண்டர்கேஸ்ட் மற்றும் சாதியா இக்பால்.