விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
ஐந்திணை மக்கள் கட்சியினா் கண்டன ஆா்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்குத் தெருவில் ஐந்திணை மக்கள் கட்சி சாா்பில், பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பெரியாரை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். விவசாய அணி மாநிலச் செயலா் ஜோசப், மாவட்டப் பொருளாளா் இமானுவேல், மாவட்ட துணைத் தலைவா் சாா்லஸ், ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளா் தீபன் ராஜ், பெரியாா் பேரவைத் தலைவா் நாகேஸ்வரன், விவசாய அணி மாநில ஒருங்கிணைப்பாளா் அழகா்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.