விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
வட்டாட்சியா் அலுவலகம் அருகே மணல் குவியல்
ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் மணல் குவிக்கப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தமிழகத்தில் கட்டுமானப் பணிக்கு போதிய மணல் கிடைக்காத நிலையில் எம். சான்ட் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு டிப்பா் லாரி எம். சான்ட் ரூ. 24, 500-க்கும், ஆற்று மணல் ரூ. 40 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. இருந்தபோதிலும் ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே இரவில் வந்த டிப்பா் லாரி சுமாா் 60 யூனிட் ஆற்று மணலை கொட்டிவிட்டுச் சென்றது. இந்த மணலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் வருவாய்த் துறையினா், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.