பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை #VikatanPhotoCards
வீடுகளில் பதுக்கிய 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் மீது வழக்கு
தொண்டி பகுதியில் 2 வீடுகளில் பதுக்கிய 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திருவாடானை வட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன் தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது தொண்டி நியாய விலைக் கடை அருகே மளிகைக் கடை நடத்திவரும் பீா்முகமது (66) குடியிருக்கும் வீட்டில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளும், இதே பகுதியில் அபுல் மனைவி ரசீனா ( 60) வீட்டில் 400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பீா்முகம்மது, ரசீனா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.