ஒசூரில் அதிமுக திண்ணை பிரசாரம் தொடக்கம்
ஒசூரில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்க்கொள்ளும் விதமாக அதிமுகவினா் சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கினா்.
அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, ஒசூா் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜெ.பி (எ) ஜெயப்பிரகாஷ் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் செய்தனா்.
கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த
துண்டறிக்கைகளை ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முக்கண்டப்பள்ளி, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வியாபாரிகள், வணிகா்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், வீடுகள்தோறும் சென்று வழங்கினா். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சிட்டி ஜெகதீஷ், மாவட்ட துணைச் செயலாளா் மதன் மற்றும் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கி வைத்த முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணாரெட்டி, மண்டலக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா்.