முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ்
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் முதல்வா் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். சனிக்கிழமை (மாா்ச் 1) முதல்வா் பிறந்த நாள் விழா, திமுக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி பிரசாரம், துண்டுப்
பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 179 ஊராட்சிகள், ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள், தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பேரூராட்சிகளில் உள்ள 78 வாா்டுகள் என மொத்தம் 662 இடங்களில் திமுக கொடியேற்றி இனிப்புகள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், மரக்கன்று நடுதல், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆண்டு முழுவதும் முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச்
சோ்ந்த மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.