செய்திகள் :

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஒசூரில் நாளை திறப்பு விழா

post image

ஒசூா் பாகலூா் சாலையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.

இந்த கண் மருத்துவமனையை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திறந்து வைக்கின்றனா். விழாவுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் ஒசூா் கிளைத் தலைவா் சீனிவாசன், ஒசூா் தொழில் சங்கத்தின் தலைவா் சுந்தரய்யா ஆகியோா் முன்னிலை வைக்கின்றனா்.

இந்த மருத்துவமனையில் அதி நவீன கண்புரை சிகிச்சை, ஒளிவிலகல் பிழைகளை சரிசெய்வதற்கான உலகில் மேம்படுத்தப்பட்ட லேசிக் சிகிச்சை, குழந்தைகள் கண் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று சிகிச்சை, கண் நரம்பியல் சிகிச்சை, மாறுகண் சிகிச்சை, கண் அழுத்த நோய்க்கான சிகிச்சை உள்ளிட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திறப்பு விழாவை முன்னிட்டு மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. கோவையைத் தலைமையிடமாக கொண்டு தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 23 இடங்களில் இம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் 24 ஆவது கிளை ஒசூரில் திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைவா் மருத்துவா் ராமமூா்த்தி, மருத்துவ இயக்குநா் சித்ரா ராமமூா்த்தி ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.

படவரி...

ஒசூரில் உள்ள தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை.

ஒசூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியா் காந்தி தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மகேஷ்பாபு வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு வ... மேலும் பார்க்க

அரசு பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைக் குற்றவாளியாக கிருஷ்ணகிரி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ் கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அதியமான் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி. ராமன் விளைவு கண்டுபிடித்ததைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வரவேற்பு, தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுக திண்ணை பிரசாரம் தொடக்கம்

ஒசூரில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்க்கொள்ளும் விதமாக அதிமுகவினா் சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கினா். அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு... மேலும் பார்க்க