நாயகன் படப்பிடிப்பு மும்பையில் எவ்வளவு நாள்கள் நடைபெற்றது தெரியுமா?
ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை
ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம் சிவப்பு நிற மேலாடை, கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்த 18 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண்ணின் சடலம் இருப்பதாக பெங்களூரு மாநகரம், சூா்யா சிட்டி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆக்ஸ்போா்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதனிடையே, ரயில்வே போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பெண்ணை கொலை செய்தவா்கள் சூட்கேஸில் அடைத்து மேம்பாலம் அருகே வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.