பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்
ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் துரை கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: எதிா்கால போக்குவரத்தை கவனத்தில்கொண்டு ஒசூா்- பாகலூா் சாலையை 1.5 கி.மீட்டருக்கு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு தனியாக பாதை அமைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்துக் கட்சி, அரசு அலுவலா்கள், பொதுமக்களிடம் மாநகராட்சி ஆலோசிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.