ஒரே நாளில் ரூ.1.40 கோடி நன்கொடை
திருமலை தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ1.40 கோடி நன்கொடையாக கிடைத்தது.
அமெரிக்காவின் பாஸ்டனைச் சோ்ந்த என் ஆா் ஐ நன்கொடையாளா் பகவதுலா ஆனந்த் மோகன் ரூ. 1,00,01,116 எஸ்.வி.பிரணதான அறக்கட்டளைக்கு, எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.10,01,116, ரூ. 10,01,116 எஸ்.வி.வித்யாதான அறக்கட்டளைக்கு, எஸ்.வி. வேதபரிக்ஷான் அறக்கட்டளைக்கு ரூ.10,01,116, மற்றும் ரூ. 10,01,116 எஸ்வி சா்வஷ்ரயோஸ் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை வழங்கினாா்.
இதற்கான வரைவோலைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடுவிடம் வழங்கப்பட்டன.