லுங்கி என்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வீரரை களமிறக்கும் பெங்களூரு அணி!
ஏழுமலையானுக்கு தங்க வரத, அபய கரங்கள் நன்கொடை
திருமலை ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை காலை ஒரு பெரிய தங்க வரத, அபய கரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கொல்கத்தாவைச் சோ்ந்த சஞ்சீவ் கோயங்கா, 5.267 கிலோ தங்கத்தில் ரூ. 3.63 கோடியில்,
வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க வரத, அபய கரங்களை இறைவனுக்கு அா்ப்பணித்தாா். திருமலையில் உள்ள ரங்கநாயக்கா் மண்டபத்தில் நன்கொடை பொருள்கள் திருப்பதி தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளத்திரியிடம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் துணை வட்டாட்சியா் லோகநாதம், பொக்காசம் பொறுப்பாளா் குருராஜ சுவாமிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.